கொல்லிமலையில் அரியவகை கனிமவளங்கள்: காந்திகிராம பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

கொல்லிமலையில் அரியவகை கனிமவளங்கள்: காந்திகிராம பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் விலைமதிப்பற்ற அரிய வகை கனிமவளங்கள் இருப்பதை, திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக புவி அறிவியல் துறை மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், இயற்கை கனிமவளத்தை கண்டுபிடிக்கவும், புவியியல் ஆய்வு மேற்கொள்ளவும் முதலில் புவி அறிவியல் மையம், நில அளவைத் துறை ஆகிய இரு துறைகளைத்தான் தொடங்கினர். அதன் பின்னரே மற்ற துறைகளை அவர்கள் ஏற்படுத்தினர்.

புவி அறிவியல் மையம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவில் புவி அறிவியல் துறை பயன்பாடு வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது. சுனாமிக்குப் பின்னர், புவி அறிவியல் மைய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் ஏற்பட் டுள்ளது. திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் 2012-ம் ஆண்டுபுவி அறிவியல் மையம் தொடங் கப்பட்டது.

பல்கலை. மாணவர்கள் ஆராய்ச்சி

இந்தத் துறையில் படிக்கும் மாணவர்கள், தமிழகம் மட்டுமில் லாது இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, புவியில் இருக்கக்கூடிய கனிமவளம், நிலத்தடி நீர், நிலச்சரிவு, சுனாமி, பேரிடர் மேலாண்மை குறித்து ஆய்வுசெய்கின்றனர். கடந்த ஆண்டு, தொலை நுண்ணுணர்வு அறிவியல்

மூலம் நிலச்சரிவு, கனிமவளப் பாறைகள் ஆய்வுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, காந்திகிராமம் பல்கலைக் கழகத்துக்கு ரூ.57.50 லட்சம் மானியம் வழங்கி உள்ளது. இந்த நிதி மூலம், காந்திகிராமம் புவி அறிவியல் துறை மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பூமிக்கு கீழே பாறையின் தன்மையை ஆய்வு செய்கின்றனர். பூமிக்கடியில் அக்னிப்

பாறைகள், உருமாறிய பாறைகள், படிவப்பாறைகள் காணப்படுகின்றன. இந்த பாறைகள், தற்போது கிரானைட், டைல்ஸ், மார்பிள், இரும்பு, அலுமினியம், மாக்னசைட், நிலக்கரி, சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டிட வேலைப்பாடுகளுக்கு வெட்டி எடுக்கப்படுகின்றன.

அரியவகை கனிம வளங்கள்

தரைமட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள கொல்லிமலை 485 சதுர கி.மீ. பரப்பில் உள்ளது. இந்த கொல்லிமலையில் கனிமவளம், தண்ணீர் பற்றி, காந்தி கிராம பல்கலைக்கழக மாணவர்கள் தொலை நுண்ணுணர்வு அறிவியல் (ரிமோட் சென்சிங்) மற்றும் புவி தகவல் அமைப்பு மூலம் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.

செயற்கைக்கோள் உதவியுடன் எடுத்த படங்கள் மூலம் மாணவர்கள், கொல்லிமலையில் பாறை, தண்ணீர், வனவளம் குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த மலைப்பாறைகளில் 1991-ம் ஆண்டு, 2000-ம் ஆண்டு, 2010-ம் ஆண்டு ஆகிய 3 கால இடைவெளியில் என்னென்ன உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றியும், அவற்றை முன்பிருந்த மலைப்பாறையுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.

கொல்லிமலையில் நிலச்சரிவு?

இதுகுறித்து காந்திகிராமம் பல்கலைக்கழக புவி அறிவியல் துறை பேராசிரியர் பி.குருஞானம் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியது: ‘‘செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட கொல்லிமலை நீரோடைகள், பாறை வகைகள், மண் வளம், டிஜிட்டல் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் முறையில் கணினியில் பெரிதாக்கி, அவை எந்த வகையில் தற்போது பயன்படுகின்றன என்பதை ஆய்வு செய்கிறோம்.

கடந்த 30 ஆண்டுகளில் கொல்லிமலையில் நிகழ்ந்த மாற்றங்களை பாடமாகப் படிக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது.

கொல்லிமலையில் நிலச்சரிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக நடைபெற்ற ஆராய்ச்சி மூலம், கொல்லிமலையில் 438 சதுர கி.மீ. பரப்பில் சார்னோ கைட் பாறைகள், 11 சதுர கி.மீ. பரப்பில் நேசிக் பாறைகள், 5 சதுர கி.மீ. பரப்பில் பாக்சைட் வகை பாறைகள், 17 சதுர கி.மீ. பரப்பில் டைக் பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in