Published : 20 Sep 2014 11:50 AM
Last Updated : 20 Sep 2014 11:50 AM
சமூக வலைதளங்கள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக வும், பெண்கள், குழந்தைகளை குறிவைத்து நடக்கும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரம் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. கல்லூரியில் தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரம் என்ற அமைப்பின் சார்பில் சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங் களில் இருந்தும் நீதிபதிகள், காவல் துறையினர், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக வும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும், காவல்துறை அதிகாரிகளும் விளக்கினர். சைபர் குற்றங்களைத் தடுக்க பாதுகாப்பை மேம்படுத்து வது குறித்தும் சர்வதேச அளவில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்து வது குறித்தும் விவாதிக்கப்பட்டன. புதிய தொழில்நுட்பங்கள் வளர வளர அதன் மூலம் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை பதிவிடும்போது அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொருவரும் அறிந்து வழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம். இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கவே செய்யும்.
குறிப்பாக, பெண்களும், குழந் தைகளும் சமூக வலைதளங்களில் குறிவைக்கப்படுகின்றனர். பெண் கள், குழந்தைகளை குறிவைத்தே சைபர் குற்ற சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடக்கிறது. சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பதும், அவர்களின் எண்ணை இணையத்தில் வெளியிட்டு மன ரீதியாக துன்புறுத்துவதும் நடைபெறுகிறது.
இணையம் மூலம் பணப் பரிவர்த்தனை தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இ-மெயில் மூலம் லாட்டரியில் பணம் விழுந்திருப்பதாகக் கூறி குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோருடைய தகவல்களைப் பெறுவதும் நடைபெறுகிறது.
எனவே, சமூக வலைதளங்களி லும், இணையத்திலும் என்னென்ன தகவல்களை வெளியிட வேண்டும், எதை வெளியிடக் கூடாது என்ற விழிப்புணர்வு கொள்வது அவசியம் என கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
கருத்தரங்கிற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் தரம் தலைவருமான எஸ்.மோகன் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற, காவல்துறை அதி காரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.