டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
Updated on
1 min read

டீசல் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:

உணவு பணவீக்கம் உயர் வதற்கு காரணமான டீசல் விலையை சனிக்கிழமை நள்ளிரவு முதல் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 50 காசு உயர்த்தியிருப்பது கவலை அளிக்கிறது. முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையே எண்ணெய் நிறுவனங்கள் இதுபோன்று விலை உயர்வை அறிவித்திருப்பதற்கு காரணம்.

சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்துகொண்டே வருகின்ற நிலையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையை சுட்டிக் காட்டி, அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது ஏழை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

இந்த டீசல் விலை உயர்வு காரணமாக, உணவு பொருட்களை ஆங்காங்கே எடுத்துச் செல்லும் வேன், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும். இந்த உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையையும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையையும் உயர்த்த வழிவகுக்கும்.

வாபஸ் பெற நடவடிக்கை

பல துறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் பிரதமர், நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ள படி, பெட்ரோலியப் பொருட்க ளின் விலை நிர்ணயக் கொள்கை யில் தனிக் கவனம் செலுத்தி, பணவீக்கம் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோலியப் பொருட் களின் விலை நிர்ணயக் கொள்கை யிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போதைய டீசல் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in