Published : 04 Jan 2019 08:05 AM
Last Updated : 04 Jan 2019 08:05 AM

ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார்; மின்வாரிய தலைமையகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: தங்க நாணயங்கள், பணம் பறிமுதல்

அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்க நாணயங்கள் மற்றும் பல லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சென்னை அண்ணா சாலை யில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதி காரிகளுக்கு சிலர் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்வதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் மாலையில் இருந்தே மின்வாரிய அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் மாறுவேடங்களில் கண்காணிக்க தொடங்கினர். பின்னர் இரவில், குறிப்பிட்ட சில அதிகாரிகளின் அலுவலகங்களுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். இதில் லஞ்சமாக கொடுக்கப்பட்ட தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் போலீஸார் வருவதை அறிந்து லஞ்ச பணம் மற்றும் தங்க நாணயங்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். அதையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு

சோதனை முடிந்த பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி குமரகுரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “புத்தாண்டை முன்னிட்டு மின் வாரிய ஒப்பந்ததாரர்கள் பலர், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத் துள்ளனர். அவற்றை கைப்பற்றி இருக்கிறோம்.

மின்வாரிய தலைமை பொறி யாளர் உட்பட சிலரது அலுவலக ங்களில் சோதனை நடைபெற்றது. இதில், 18 தங்க நாணயங்கள், ரூ.1.5 லட்சம், புதிய ஆடைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x