Published : 26 Jan 2019 09:03 am

Updated : 26 Jan 2019 09:03 am

 

Published : 26 Jan 2019 09:03 AM
Last Updated : 26 Jan 2019 09:03 AM

70-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: ஆளுநர் பன்வாரிலால், தலைவர்கள் வாழ்த்து

70

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: குடியரசு தினத்தை கொண் டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத் தில் தமிழக மக்களுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி றேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததையும், ஜனநாயகத்தின் சாராம்சத்தையும் இந்நாள் நமக்கு நினைவுபடுத்து கிறது. மக்கள் நாட்டின் எஜமா னர்கள் என்பதுதான் குடியரசின் பொருள். தேசவளம், தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். அரசியலமைப் புச் சட்டத்தை சுவாசமாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு டன் பணியாற்ற உறுதியேற்போம்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு அனைத்துத் துறைகளிலும் உலகம் வியக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந் துள்ளது. பிரதமர் மோடி, உலகத் தலைவர்களால் மதிக்கப்படுகிறார். இனி வருகின்ற காலங்களில் நம் நாடு உலகத்தின் முதல் நிலை நாடாக உருவாகக் கூடிய வகையில் இந்த நாளில் நாம் சபதம் எடுப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: மதம், ஜாதி, இனம், மொழி, கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தா லும் இந்தியர் என்ற ஒரே சொல்லில் நாம் அனைவரும் பிணைக்கப்பட் டுள்ளோம். உலக நாடுகளில் ஒரு மைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. இதற்கு குந்தகம் விளைவிப்போரை வீழ்த்தி புதிய இந்தியா படைக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்.

அமமுக துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன்: பன்முகத் தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையும் கொண்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்தியா, ஒரு குடியரசாக பரிணமித்த நாள் குடியரசுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு வலிமை சேர்த்த தலைவர்களையும், நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களையும் வணங்குவோம். நாட்டின் முன்னேற் றத்துக்கு தடையாக உள்ள இடை யூறுகளை களைவோம். வளம், வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் தழைக்க உறுதியேற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: விடுதலைக்கு வித்திட்ட தேசத் தலைவர்களையும், தியாகி களையும் குடியரசு நாளில் நினைவு கூர்வோம். குடியரசு நாடாக இந்தியா உருவாகி 70 ஆண்டுகளா கியும் லஞ்சம், ஊழல், வறுமை ஒழியவில்லை. விவசாயிகளின் துயரமும் தீரவில்லை. இந்த தடைகளை தகர்த்து ஜாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடும் இன்றி இந்தியர்கள் என்ற உணர்வோடு இணைய இந்நாளில் உறுதியேற்போம்.

சமக தலைவர் சரத்குமார்: 70-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கருத்து சுதந்திரம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை ஆகியவை மத்திய பாஜக அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தை எந்தச் சூழலிலும், யாராலும் அசைக்க முடியாது என்பதை இந்நாளில் உணர்த்துவோம்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள் குடியரசு தினம். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், அதன் ஆன்மாவாகத் திகழும் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளையும் மத்திய பாஜக அரசு சிதைத்து வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித் துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x