

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தெற்கு வங்கக் கடலின் மத் திய பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நில நடுக்கோட்டு பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியுடன் கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலநடுக் கோட்டுக்கு கீழ் நிலவுகிறது. இதனால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதன் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதி களில் உறைபனி நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் சில இடங் களில் மூடுபனி நிலவக்கூடும்.
இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.