Published : 03 Jan 2019 12:26 PM
Last Updated : 03 Jan 2019 12:26 PM

பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை: 486 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மண்டலம் வாரியாக தீவிர சோதனை நடத்தினர்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதை தொடர்ந்து, தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் நகரில் எந்த பகுதியிலாவது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் ப.காந்திமதி மேற்பார்வையில், மாநகராட்சி நகர்நல அலுவலர், அந்தந்த மண்டல உதவி ஆணையர் கள் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நகரில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். 35 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மண்டலம் வாரியாக கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சிறிய கடை முதல் பல்பொருள் அங்காடி வரை பார பட்சமின்றி அனைத்து கடைகளிலும் சோதனை நடத்துகின்றனர். இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். அதே போல், பொதுமக்கள் கொண்டு வந்து அளித்த பிளாஸ்டிக் பொருட் களையும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் கூறியதாவது: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 486.50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மாநகரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வடக்கு மண்டலத்தில் 30 கிலோ, தெற்கு மண்டலத்தில் 20 கிலோ, கிழக்கு மண்டலத்தில் 6 கிலோ, மேற்கு மண்டலத்தில் 75 கிலோ, மத்திய மண்டலத்தில் 200 கிலோ என மொத்தம் 331 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தாங் களாக முன்வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள னர். பிளாஸ்டிக் இருப்பு, விற்பனை செய்தது தொடர்பாக வடக்கு மண்டலத்தில் ரூ.37 ஆயிரம், தெற்கு மண்டலத்தில் ரூ.3 ஆயிரம், கிழக்கு மண்டலத்தில் ரூ.500, மேற்கு மண்டலத்தில் ரூ.6,500, மத்திய மண்டலத்தில் ரூ.6,500 என மொத்தம் ரூ.53,500 தொகை அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்படும். பின்னர், இந்த பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, அதில் இருந்து வரும் திரவத்தை எடுத்து தேவையான பயன்பாட்டுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது. அவர்களை கண் டறிந்து, அவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.துணிப் பை விற்பனையகம்

மாநகராட்சி பிரதான அலு வலக வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை, கிழங்கு, மக்காச் சோள கழிவால் உருவாக்கப் பட்ட பைகள் விற்பனை செய்யப் படும் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் திரண்டு, தங்களுக்கு தேவையான அளவுகளில் பைகளை வாங்கிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x