சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு: வேடசந்தூர் அருகே கிராமத்தில் தொடரும் பாரம்பரிய விழா

சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு: வேடசந்தூர் அருகே கிராமத்தில் தொடரும் பாரம்பரிய விழா
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஒரு கிராமத்தில் சிறு மியை நிலா பெண்ணாக தேர்வு செய்து பெண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் விழா தேவி நாயக்கன்பட்டியில் நடைபெற்றது.

தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி நாளன்று இரவு முழுவதும் நிலா பெண் வழிபாடு கிராம மக்களால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

முன்னதாக ஒரு வாரத்துக்கு முன்பு ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் வசிக்கும் சிறுமிகளின் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் நிலாப்பெண்ணை தேர்வு செய் கின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு கிராமத்தில் உள்ள பலரும் தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுகளை கோயிலில் வைத்து சிறுமிக்கு வழங்குகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது.

நிலாப்பெண்ணாக தேவிநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ், தவமணியின் மகள் கனிஷ்கா (7) தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் சிறுமிக்கு புத்தாடை அணிவித்து ஆவாரம் பூ மாலையிட்டு அலங் கரித்தனர்.

அந்த சிறுமியிடம் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடைகளை கொடுத்து மாசடைச்சி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து மாரியம்மன் கோயிலு க்கு முன் வந்தனர்.

அங்கு சிறுமியை அமர வைத்து இரவு முழுவதும் பெண்கள் கும் மியடித்து நிலா பாடல்களை பாடி வழிபட்டனர். பின்னர் பொங்கல் வைத்து வழங்கினர்.

விடிவதற்கு சில மணி நேரம் முன்பு அருகேயிருந்த நீர் நிலையில் சிறுமியை தீபம் ஏற்றச் செய்து வழிபட்டனர். பின்னர் பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இதுகுறித்து கிராம பெண்கள் கூறியதாவது:

நிலா பெண் வழிபாடு பழக்கம், எங்கள் கிராமத்தில் தொன்று தொட்டு நடக்கிறது. இந்த விழா கொண்டாடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in