நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு 

நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு 
Updated on
1 min read

குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படு வதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதி களின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப் பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரி களுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து, அதுகுறித்த தகவலை உடனே தலைமையிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வேறு பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி, தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்து வருவதை உளவுப்பிரிவினர் கண்டறிந்து 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் அருகே, தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டு சந்தேகப் படும் விதத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு நேற்று காலை இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் குடியரசு தின விழா நடைபெறுவதால் நாளையும் விழா முடியும்வரை மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in