

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் எழும் பூர் நீதிமன்றம் காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டைப் பதிந்தது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாடுக ளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது உறவினர் பாஸ் கரன் மீது அமலாக்கத் துறை யினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளில் கடந்த 2017-ல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிடம் காணொலி காட்சி மூலமாகவும், பாஸ்கரனிடம் நேரிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதுதொடர்பான ஆவணங்களில் சசிகலா கையெழுத்திடவில்லை என்பதால் மறுகுற்றச்சாட்டு பதிவுக் காக அவர் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிட்டது.
சசிகலா மீதான 2 வழக்குகளில் ஏற்கெனவே குற்றச்சாட்டுப் பதிவு முடிந்துள்ளது. இந்நிலை யில், எஞ்சிய வழக்குகளில் குற்றச் சாட்டை பதிவு செய்வதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பாக இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டைப் பதிவு செய்தார். தன் மீதான குற்றச்சாட் டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பொய்யாக புனையப்பட் டவை என்றும் சசிகலா தெரிவித் தார். மேலும், அரசு தரப்பு சாட்சிகளை தனது தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து இந்த வழக்கை பிப்.18-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.