Published : 02 Jan 2019 08:45 AM
Last Updated : 02 Jan 2019 08:45 AM

தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பால் மக்களிடம் பெருகும் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு

ஒருமுறை மட்டுமே பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நேற்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு மாற்றாக பயன் படுத்தக்கூடிய பொருட்கள் குறித் தும் அரசு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

பொதுமக்களையும், வர்த்தகர்க ளையும் மனதளவில் பிளாஸ்டிக் ஒழிப்பில் முழுமையாக ஈடுபடச் செய்வதற்கான விழிப்புணர்வு பிரச் சாரங்களும் நடைபெற்று வருகின் றன. நீண்டநாள் பழக்கத்தை திடீரென மாற்றுவது சற்று சவாலான காரியம்தான் என்றபோதிலும், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை வியாபாரி கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நுகர்வோருக்கு பச்சை துண்டு

மன்னார்குடியை அடுத்த வடுவூ ரில் நேற்று காலை கடைகளுக்கு கைப்பையுடன் வந்தவர்களை பாராட்டும் விதமாக மகிளங்காடு மக்கள் மன்றம் அமைப்பினர் பச்சை நிற துண்டு போர்த்தி பாராட்டினர்.

இதுகுறித்து மன்றத்தின் ஒருங் கிணைப்பாளர் மலர்மன்னன் கூறிய போது, ‘‘பிளாஸ்டிக் தடை விழிப் புணர்வை ஏற்படுத்த இளைஞர் கள் இணைந்து வடுவூரின் பழைய பெயரான மகிளங்காடு என்ற பெயரில் மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினோம்.

கைப்பையுடன் வருபவர்க ளுக்கு பச்சைத் துண்டு அணிவித்து பாராட்டுங்கள் என்று வியாபாரிக ளிடம் கேட்டுக் கொண்டதுடன், துண்டுகளையும் வாங்கிக் கொடுத்தோம். ஊரின் அனைத்து கடைகளிலும் இளைஞர்கள் நின்று கொண்டு, கைப்பை எடுத்துவரும் மக்களுக்கு கடைக்காரர்களைக் கொண்டே துண்டு அணிவித்து பாராட்டச் செய்தோம்’’ என்றார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களைப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உணவு விடுதிகளில் வாழை இலையில் உணவை வைத்து காகிதத்தில் மடித்து நூல் கொண்டு கட்டிக் கொடுக்கும் பழைய பொட் டல முறைக்கு மாறி வருகின்றனர். இதேபோல, இறைச்சிக் கடைக ளுக்கு பொதுமக்கள் பாத்திரங்க ளைக் கொண்டுவந்து இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.

மார்க்கெட்களுக்கு பொருட் கள் வாங்க பொதுமக்கள் துணிப் பை, வயர் கூடைகளுடன் வந்தனர். பெரும்பாலான மளிகைக் கடைக ளில் துணிப் பைகள் தொங்கவிடப் பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந் திருந்தது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்ட ஓட்டல்களில் பார்சலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஓட்டல் கள் உரிமையாளர் சங்க தலைவர் சுப்புராமன், நகரத் தலைவர் சந்திர சேகரன் ஆகியோர், “பிளாஸ்டிக் தடை பற்றி முறையாக அறிவிக்கப் படவில்லை. குழப்பமாகவே உள்ளது. மக்கா சோளத்துடன் சில வகையான பொருட்களை கலந்து செய்யப்பட்டுள்ள 'பயோ பேக்' கவர்களை பார்சலுக்கு பயன்படுத் துகிறோம். இதனால் பார்சலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப் படுகிறது'' என்றனர்.

பண்ருட்டியில் பழைய பேப்பர் கடையில் மந்தாரை இலை விற்பனை செய்த ராஜேந்திரன் கூறும்போது, ‘‘இந்த இலையை கிலோ 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கிறேன். கடந்த சில நாட்களாக ஓட்டல் கடைக்காரர்கள் அதிகளவில் இதை வாங்கச் செல் கின்றனர். பொட்டலம் மடிக்க ஒரு கிலோ தமிழ் பேப்பர் ரூ.18-க்கும், ஆங்கில பேப்பர் 23-க்கும் விற்கி றேன்'' என்றார்.

சேலத்தில் ஆவின் பார்லர்களில் சில்வர் டம்ளர்களும், கடைகளில் மக்கும் தன்மை கொண்ட கேரி பேக்குகளும் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. சேலம் செவ்வாய்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் மீரா சாஹிப் கூறும்போது, “செய்தித்தாள்கள் போன்றவற்றை கவர்களாக மாற்றி ஒட்டிக் கொடுக்கும் தொழில் அழிந்து விட்டது. மேலும், பேப்பர் கவர்கள் எளிதில் கிழிந்து விடுகின்றன. எனவே, மாற்று இல்லாததால் பேக்கிங் செய்து கொடுப்பதற்கு மட்டும் பாலித்தீன் கவர்களை பயன் படுத்த வேண்டிய நிலை உள்ளது. மாற்று வழியினை அரசுதான் கூற வேண்டும்” என்றார்.

பழங்கள் விற்பனை செய்யும் பெண் வியாபாரி கூறும்போது, “கேரி பேக் பாக்கெட் வாங்கினால் ரூ.50-க்கு 100 பைகள் கிடைக்கும். தற்போது துணிப்பைகள் வாங்குகி றோம். இது கிலோ ரூ.120 ஆகிறது. பைகளின் எண்ணிக்கையும் குறை வாக இருக்கிறது. கையிருப்பு கேரி பேக்குகளை மட்டும் பயன்படுத்தி விட்டு, இனி துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த உள்ளோம்” என்றார்.

ஈரோட்டில் வேலைநிறுத்தம்

ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற் பனையாளர்கள் சங்கத்தினர், பிளாஸ்டிக் தடையை எதிர்த்து 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். மாவட்டத்தில் 160 பிளாஸ்டிக் உற் பத்தி நிறுவனங்கள், 350 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

டாஸ்மாக்கில் கண்ணாடி டம்ளர்

திருச்சியில் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடை பார்களில் பிளாஸ்டிக் கப், குடிநீர் பாக் கெட்டுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர், குடிநீர் பாட்டில், சைடு டிஷ் வைப்பதற்கு வாழை இலை ஆகியவை வழங்கப்படுகின் றன.

இதுகுறித்து கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பார் ஊழியர் கூறும்போது, ‘‘இதற்குமுன் இங்கு மது அருந்த வருவோர் ஒரு குவார்ட்டர் மது குடிப்ப தற்கு, ஒரு பிளாஸ்டிக் கப், 2 குடிநீர் பாக்கெட்டுகளுக்கு ரூ.12 என மொத்தம் ரூ.18 செலவழித்தனர்.

இப்போது கொண்டு வந்து உள்ள மாறுதலால் கண்ணாடி டம்ளர் ரூ.10, குடிநீர் பாட்டில்கள் இரண்டுக்கு ரூ.10 என ரூ.20 செலவிட வேண்டியுள்ளது. ஏற் கெனவே இருந்ததைவிட 2 ரூபாய் மட்டுமே கூடுதலாக செலவாவதால் வாடிக்கையா ளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை’’ என்றார்.

பால் வாங்க இலவச தூக்குவாளி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மாரம்பாடி சாலையில் தனியார் பால் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பிளாஸ்டிக் தடையை மறந்து கையை வீசிக்கொண்டு பால் வாங்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

வழக்கமாக பாலித்தீன் கவரில் பாலை அடைத்து, பாலித்தீன் பையில் பாலை எடுத்துச் செல்பவர்களுக்கு, நேற்று ரூ.180 மதிப்புள்ள தூக்குவாளியை இலவசமாக வழங்கி அதில் பாலை ஊற்றி கொடுத்து விற்பனை செய்தார் விற்பனையாளர். இதனால் பால் வாங்க வந்தவர்கள் மகிழ்சியடைந்தனர். இதுகுறித்து பால் விற்பனை நிலைய உரிமையாளர் கே.தனபாலன் கூறியதாவது: பிளாஸ்டிக் தடையை மக்களிடம் கொண்டுசெல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்குத் தூக்குவாளி வழங்க முடிவு செய்யப்பட்டது. காலை, மாலை என எனது கடைக்கு 500 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தூக்குவாளி வழங்கி வருகிறோம். புதிதாக பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த முறையை அமல்படுத்துகிறோம்.

ஒவ்வொரு நாளும் காலை, மாலை பால் வாங்க வரும்போது இலவச தூக்குவாளியைக் கொண்டு வந்துதான் வாடிக்கையாளர்கள் பால் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார்.

ஓலைப் பெட்டியில் அல்வா

திருநெல்வேலி அல்வா கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகளுக்கு பதிலாக, `பட்டர் பேப்பர்’ எனப்படும் ஆயில் பேப்பரில் அல்வாவை பொதிந்து துணிப்பைகளில் அளித்தனர் அதிலும் வித்தியாசமாக திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் உள்ள ஹாரிகா அல்வா கடையில், அல்வா, இனிப்பு, காரம் போன்ற பண்டங்களை பனை ஓலைப் பெட்டியில் பொதிந்து விற்பனை செய்தனர். அல்வாவின் நெய் ஒழுகாமல் இருக்க அதனை, பட்டர் பேப்பரில் பொதிந்து, பனை ஓலைப் பெட்டியினுள் வைத்து விற்பனை செய்தது பலரையும் ஈர்த்தது.

இக்கடை உரிமையாளர் ஹாரிகா கண்ணன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் விளையில் குடிசை தொழிலாக பல வீடுகளில் பனை ஓலை பெட்டிகளை முடைகிறார்கள். அங்கிருந்து அவற்றை வாங்கி வந்துள்ளேன். பனை ஓலை பெட்டியில் வைத்து அல்வாவை விற்பனை செய்வதால் விலையை உயர்த்தவில்லை என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x