Last Updated : 07 Jan, 2019 08:05 AM

 

Published : 07 Jan 2019 08:05 AM
Last Updated : 07 Jan 2019 08:05 AM

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க பாஜக தீவிரம்- கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பியூஸ் கோயல், சி.டி.ரவி நியமனம்

தமிழகத்தில் பாஜக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ சி.டி.ரவி ஆகியோரை அமித்ஷா நியமித்துள்ளார்.

வரும் ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு 2 மாதங்கள்கூட இல்லாத நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பொதுக்கூட்டங்கள் என தேர்தல் பணிகளில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பாஜகவைப் பொறுத்தவரை பிஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் திமுக, ஆந்திரம், தெலங்கானாவில் தெலுங்கு தேசம், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், கேரளம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை அடைய வாய்ப்புள்ள அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி அமைக் கும் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ சி.டி.ரவி ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் (80), மகாராஷ் டிரம் (48), மேற்கு வங்கம் (42), பிஹார் (40) ஆகிய மாநிலங் களுக்கு அடுத்து 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட பெரிய மாநிலம் என்பதால் தமிழகத்துக்கு பாஜகவும், காங்கிரஸும் முக்கியத் துவம் கொடுத்து வருகின்றன.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றால் இழுபறி நிலை ஏற்படும்போது காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்து விடும் என பாஜக கருதுகிறது. எனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க பாஜக முயன்று வரு கிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ளவே பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இதுதொடர்பாக பாஜக முக்கிய தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால் பிரிந்துள்ள அதிமுக ஒன்றாக இணைந்து அக்கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதற்காகவே பியூஸ் கோயல், சி.டி.ரவி ஆகியோரை அமித்ஷா நியமித்துள்ளார். அவர் விரைவில் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார். தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மோடியும், அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர்'' என்றார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். கூட்டணி தொடர்பாக பேசவில்லை என இருவரும் தெரிவித்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை முதல்வரிடம் அவர் கள் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது.

3 சதவீத வாக்கு வங்கி உள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை மதத்தினரின் 15 சதவீத வாக்குகள் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று விடும். 2004-ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டி யிருக்கும் என முதல்வர் பழனிசாமி தன்னை சந்தித்த பாஜக தலை வர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைக் காவிட்டாலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தி வருவ தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x