

ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மட்டும் உடனடியாக பணிக்கு திரும்ப முடியுமா என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக நேற்று (ஜன.28) மதியத்துக்குள் பதிலளிக்க வேண் டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபா கரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ - ஜியோ சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘நியாயமான கோரிக் கைகளை வலியுறுத்திதான் தற் போது ஜாக்டோ- ஜியோ போராடி வருகிறது. இது பல ஆண்டுகால கோரிக்கை. பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்காக செலுத்த வேண்டிய ரூ. 25 ஆயிரம் கோடியை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு செலுத்தவில்லை.
7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்க வேண் டிய ஊதிய நிலுவைத் தொகையை யும் வழங்கவில்லை. எங்களது கோரிக்கையை அரசு தொடர்ந்து பரிசீலிக்கவில்லை என்பதால்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஆசிரி யர்களுக்கும் மாணவர்களின் நல னில் அக்கறை உள்ளது. இது தொடர்பாக முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் உட னடியாக போராட்டத்தைக் கைவிடத் தயார். ஆனால் தற்போது ஆசிரியர்களை இடைநீக்கம் செய் தும் பணிக்கு வரும் ஆசிரியர் களுக்கு விருப்பத்துக்கேற்ப இட மாற்றமும் வழங்கி போராட்டத்தை நீர்த்துப்போக முயற்சிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போது தவறான புள்ளி விவரங் களை தெரிவித்து குழப்பி வரு கிறது’’ என்றனர்.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பிடித்தம் போக இரண்டாம் நிலை ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது ரூ.18,000-மும் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.56,000-மும் பெறுகின்றனர். அதுவே உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்நேரத் தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம் பளம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர்களில் எனில் ரூ. 1 லட் சத்து 80 ஆயிரம் சம்பளம் பெறுகின் றனர். தற்போதைய நிலவரப்படி 85 முதல் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். எஞ்சியவர்களும் உடனடியாக பணிக்கு திரும்பிவிடுவர்.
இதுவரை 3 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதிலிருந்து வேலை கிடைக்காத ஆசிரியர் களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஏற் கெனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர் பான வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலு வையில் உள்ளதால், தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்து வது என்பது இயலாத காரியம்’ என விளக்கம் தெரிவித்தார்.
சுமுகமான தீர்வு
அதையடுத்து நீதிபதி என்.கிரு பாகரன், ‘‘மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என்பதே மகிழ்ச்சியான விஷயம். இந்த பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வுகாண வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் குறிக்கோள்.
இருதரப்பும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர்கள் போராடத் தொடங்கியதும் மற்ற அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என்பது அரசை மிரட்டி பணிய வைப்பது போல் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்தான் முக்கியம். அதனால் தான் இந்த விஷ யத்தில் நீதிமன்றமும் தலையிடு கிறது’ என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.