Published : 24 Jan 2019 09:53 AM
Last Updated : 24 Jan 2019 09:53 AM

சனாதனம் ஒழிந்தால்தான் சகோதரத்துவம் மேலோங்கும்: திருச்சி மாநாட்டில் திருமாவளவன் கருத்து

சனாதனம் ஒழிந்தால் தான் சகோத ரத்துவம் மேலோங்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் 'தேசம் காப்போம்' மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று நடைபெற் றது. இதில், அவர் பேசியதாவது:

அகில இந்திய அளவில் மதசார் பற்ற அணிகள் ஓரணியில் திரள தமிழகம் துணை நிற்கிறது. ஆட்சி அதிகாரம் கையில் உள்ள தைரியத்தில் சனாதன சக்திகள் தங்களது அராஜகங்களை நிலை நிறுத்தத் தொடங்கி விட்டன. நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோருக்கு பாது காப்பு இல்லை.

மீண்டும் சனாதன சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற் காகத்தான் இங்கு தலைவர்கள் வந்துள்ளனர். சனாதனம் ஒழிந்தால் தான் சகோதரத்துவம் மேலோங் கும்.

சனாதன சக்திகளால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய வேண்டியது நமது கடமை. இது சனாதன கோட்பாட்டுக் கும், ஜனநாயக கோட்பாட்டுக்கும் இடையிலான போராட்டம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சனாதன கோட்பாட்டை மீண்டும் கொண்டு வர முயல்கின்றனர். சனா தனம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்ணாசிரமம், ஜாதிய பாகுபாடுகள் மீண்டும் தலை தூக்கும். அதைத் தடுக்க இங்குள்ள தலைவர்கள் அனைவரும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "பாஜகவை எதிர்த் தால் தேசத் துரோகிகள் என முத் திரை குத்தப்படுகிறது. ‘தி இந்து' பத்திரிகையில் அதன் ஆசிரியர் என்.ராம் எழுதிய ஒரு கட்டுரை வந்தது. அதில், ரபேல் போர் விமானங் களின் விலை 41 சதவீதம் எதனால் அதிகரிக்கப்பட்டுள்ளது என உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் மூலம் நிரூபித்து பல செய்திகளை குறிப் பிட்டிருந்தார். ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றால், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து கட்டுரை எழுதிய இந்து என்.ராம் மீது ஏன் கோபப்பட வேண்டும்?.

அம்பேத்கர் விரும்பிய சமூக நீதியை நிலை நாட்டியது நீதிக்கட்சி ஆட்சியும், திமுக ஆட்சியும்தான். நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகளுக்கு மோடியை வீழ்த்தும் வேலை மட்டும்தான் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள நமக்கு முதல்வர் பழனி சாமியையும் வீழ்த்த வேண்டிய வேலை வந்துள்ளது. நாடாளு மன்றத் தேர்தலில் சேர்ந்து வந்தா லும், தனித்து வந்தாலும் பாஜக, அதிமுகவை வீழ்த்த வேண்டும்." இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x