

தமிழகத்துக்கு தொழில் முதலீடு களை அதிகளவில் ஈர்ப்பதற்கான 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் கே.பழனி சாமி இன்று தொடங்கி வைக் கிறார். தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
பாதுகாப்பு கொள்கை வெளியீடு
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாட்டை முன்னிட்டு கண்காட்சியும் நடத்தப்படுகிறது. மாநாடு, கண்காட்சியை முதல்வர் கே.பழனிசாமி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தமிழக அரசின் சார்பில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கையை வெளியிடுகிறார்.
பிற்பகல் 2 மணிக்கு மேல், முதலீடுகள் தொடர்பான கருத் தரங்கங்கள் நடக்கின்றன. இதில், ஆட்டோமொபைல், கல்வி, வேலைவாய்ப்பு, வானூர்தி மற்றும் பாதுகாப்பு, பயோ டெக் னாலஜி, மருந்தியல், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், முதலீடு களின் தன்மை குறித்தும் விவாதிக் கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, தமிழகத் தில் எளிமையாக தொழில் தொடங்குவது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரிவில் தமிழகத் தில் முதலீடு செய்வது, தமிழகத் தில் இருந்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் சவால்களும், கட்ட மைப்பு மேம்பாடு உள்ளிட்ட பிரிவு களின் கீழ் 4 மணி முதல் கருத் தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இரவு 7 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், முதலீட்டா ளர்களுக்கு முதல்வர் பழனிசாமி விருந்து அளிக்கிறார். நாளை நடக் கும் மாநாட்டு நிறைவு விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். இதில் புதிய முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார்.