Published : 09 Jan 2019 10:18 AM
Last Updated : 09 Jan 2019 10:18 AM

‘தி இந்து குழுமம் சார்பில் ‘சத்தியத்தின் உருவம் - காஞ்சி மஹா சுவாமி’ ஆங்கில நூல் முதல் தொகுதி வெளியீடு: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார்

காஞ்சிபுரத்தில் ‘தி இந்து' குழுமத்தின் சார்பில் உருவான ‘சத்தியத்தின் உருவம் - காஞ்சி மஹா சுவாமி (EMBODIMENT OF TRUTH -KANCHI MAHASWAMI)’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மடாதிபதி சங்கர ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலினை வெளியிட, முதல் பிரதியை ‘தி இந்து' குழு மத்தின் பதிப்பாளர் என்.ரவி பெற்றுக் கொண்டார்.

மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாறு, அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து ஆற்றிய தொண்டு, அவர் மேற்கொண்ட யாத்திரைகள், சேவை கள், அவரது தத்துவங்கள் ஆகியவற்றை இரு தொகுதிகளாக ‘தி இந்து' குழுமம் வெளியிடுகிறது. இந்நூலின் முதல் தொகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முதல் தொகுதி அவர் முக்தி அடைந்த தினமான நேற்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கி லத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் மஹா பெரியவரின் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேரில் பங்கேற்று இந்தப் பூஜையை செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘தி இந்து' குழுமத் தின் மேகசீன்ஸ் மற்றும் சிறப்பு பதிப்புகளுக் கான தலைவர் ஆர்.சீனுவாசன், புத்தக ஆசிரியர் கீதா வெங்கடரமணன் மற்றும் காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

இப்புத்தகத்தில் மஹா பெரியவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதி யானது மற்றும் அதற்கு முந்தைய அவரது வாழ்க்கை ஆகியவை குறித்து அதிகம் விவரிக்கப்பட்டுள்ளன. இதில் அவரது அரிய புகைப்படங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. 2-வது தொகுதி வரும் மே மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x