சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இலங்கை மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 இளைஞர்களை சோதனை செய்தபோது, ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை சிறு துண்டுகளாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in