

தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக தொழில்துறை துணைச் செயலாளர் ஹனிஷ் சாப்ரா, சேலம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவச் சேவை கழக மேலாண் இயக்குநர் ராஜேந்திர ரத்னு, வேலூர் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.மதுமதி, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் ஆட்சியராக இருக்கும் டாக்டர் ஆர்.நந்தகோபால், தொழில்துறை துணை செயலாள ராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் ஆட்சியர் மகரபூஷணம், தமிழ் நாடு மருத்துவச் சேவைக் கழக மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார்.
ஈரோடு ஆட்சியர் வி.கே.சண்முகம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நிய மனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.