Published : 24 Jan 2019 10:53 AM
Last Updated : 24 Jan 2019 10:53 AM

வெளிநாட்டு மொழிகளை கற்றால் தொழில் துறையில் சாதனை படைக்கலாம்: மாணவர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

 

 

ஜப்பான், கொரியா போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றால் தமிழக மாணவர்கள் தொழில் துறையில் சாதனை படைக்கலாம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை வர்த்தக மையத் தில் நேற்று நடந்த உலக முதலீட் டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை - 2019-ஐ வெளியிட்டு அவர் பேசியதாவது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, தொழில்துறையில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் முத்திரை பதித்துள்ளனர். கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலுக் கும், தஞ்சை பெரிய கோயிலுக் கும் ஒற்றுமை உள்ளது.

பூம்புகார் துறைமுகம் மிகச் சிறந்த துறைமுகமாக திகழ்ந் துள்ளது. வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள் ளிட்ட வர்த்தகத்தில் பழங்காலம் முதலே தமிழர்கள் ஈடுபட்டிருந் தனர். சோழர்கள் காலத் திலேயே தமிழகத்தில் வர்த்தக அமைப்புகள் இருந்துள்ளன. பல்வேறு கல்வெட்டுகள் இதை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதை சர்வதேச நிதிக் குழுமம் (ஐஎம்எப்) உறுதிப்படுத்தியுள்ளது. பணவீக்கம், விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க உகந்த நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இது 7 சதவீதத்தை எட்டும் என ஐஎம்எப் கணித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் இது விரைவில் சாத்தியமாகும்.

மின்மிகை மாநிலம்

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி அமலாக்கமாகும். இது, தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு அதிகம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ இதுவே காரணம்.

இந்தியாவில் உணவு உற்பத்தி தொழிலில் ஜப்பான் இறங்க இருக்கிறது. தமிழகம், கல்வி பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழக மாணவர்கள் ஜப்பான், கொரியா போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றால் தொழில் துறையில் சிறந்து விளங்க முடியும்.

மோடியின் லட்சியம்

இந்தியா ஒரு உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் லட்சியம். அதை அடைவதற்காகவே ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வழித்தடம் அமைய உள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மாநில அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x