

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை இந்தியா முழுதும் பார்க்கிறோம், ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“வரும் தேர்தல் பாஜகவின் வெற்றிக்கான அச்சாரமாக அமையும் வெற்றிக்கான அச்சாரத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை அமையும். வரும் 18-ம் தேதி கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளோம்.
பியூஷ் கோயல் பல மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வெற்றியை தேடித்தந்தவர் அவருடன் பி.டி.ரவி அவர் கர்நாடகாவில் இக்கட்டான நிலையில் வெற்றியைத் தேடித்தந்தவர் அவரும் உள்ளார். அவர்கள் தமிழகத்தில் வெற்றியைத்தேடித்தருவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.”
தேமுதிக, தமாகாவுடன் கூட்டணிக்கு பேசும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்?
திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற , பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் இந்த நாட்டுக்கு வளர்ச்சித்திட்டம் தேவை என்று எண்ணும் எந்தக்கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வோம்.
பொன் ராதாகிருஷ்ணன் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டு என்பது கூடா நட்பு கேடாய் முடியும் என்கிறாரே?
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான தகவல் இந்தியா முழுதும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால் அதன்பின்னர் அவர்கள் கூட்டணிக்கட்சிகள் ஒன்றுக்கூட அதை ஆமோதிக்கவில்லை. உ.பி.யில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் காங்கிரசுடன் அல்ல என்று கூறியுள்ளனர்.
ஆனால் சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இதன் அர்த்தம் என்ன இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மட்டுமே லாயக்கு என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே இது உபியில் பாஜக கடந்த முறை வென்ற 71 தொகுதிகளைவிட அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளதை காண்பிக்கிறது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.