Published : 06 Jan 2019 10:50 AM
Last Updated : 06 Jan 2019 10:50 AM

தென் மாநிலங்களில் இந்தி வேகமாக வளர்கிறது மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்

தென் மாநிலங்களிலும் பிராந்திய மொழிகளுக்கு நிகரான வளர்ச் சியை இந்தி பெற்று வருவதாக சென்னையில் நடந்த இந்தி பிரச் சார சபா பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

 

தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபாவின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இதில் வெளியறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு, முதலிடம் பெற்ற 26 பேருக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, இளநிலை, முதுநிலை படிப்புகளை படித்து தேர்ச்சி பெற்ற 8,300 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

 

சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டு மக்களுக்கான தேசிய மொழியாக இந்தியை உருவாக்க காந்தி விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார். அதன் தொடர்ச்சியாக 1917-ல் இந்தி பிரச்சார சபா தொடங் கப்பட்டு இந்தி மொழிக் கல்வி யில் சிறந்த சேவைகளை செய்து வருகிறது. தொடர்ந்து நாடாளு மன்றத்தில் சட்டம் இயற்றி, தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாக 1964-ல் இந்தி பிரச்சார சபா அறிவிக்கப்பட்டது.

 

முன்பு வட மாநிலங்களில் மட் டுமே இந்தி அதிகம் பேசப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி, தென் மாநிலங்களிலும் பிராந்திய மொழிகளுக்கு நிகரான வளர்ச் சியை இந்தி பெற்று வருகிறது. அதேநேரம், தமிழ் உள்ளிட்ட இதர பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த சபா உதவு கிறது.

 

இன்றைய சூழலில் இந்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித் துள்ளன. ஊடகங்கள், விளம்பரத் துறைகளில் இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, இந்தி படிக்கும் மாணவ, மாணவிகள், படித்து முடித்தவுடன் அதை விட்டுவிடாமல் தொடர்ந்து மொழியில் ஆர்வம் காட்ட வேண் டும். இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

 

இதற்கிடையே, தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி யுமான சிவராஜ் வி.பாட்டில் எழுதிய ‘குட்மார்னிங் 365’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

 

பின்னர், தமிழில் மாலன் உள் ளிட்ட மாநில மொழிகளில் சிறந்து விளங்குபவர்கள் 4 பேர் கவுரவிக் கப்பட்டனர்.

 

தொடர்ந்து சிவராஜ் வி.பாட்டில் பேசும்போது, ‘‘தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, வரலாற்று சாதனை புரிந்துள்ளது. வெறும் 5 பேரைக் கொண்டு ஆரம்பித்த மையம் மூலம் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். மொழிக் கல்வி சேவையை இந்தி பிரச்சார சபா திறம்பட தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x