

தமிழக அரசு தற்போது நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய மாநாடு மூலமாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த ஜன.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டா ளர் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் குற்றப் பின்னணியை ஆராய வேண்டும் என கோரி கேஸ் கேட் எனர்ஜி என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 21-ம் தேதி நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி பதிகள், தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பில், ‘‘கடந்த 2015-ல் நடத்தப் பட்ட உலக முதலீட்டாளர் மாநாட் டின் மூலமாக தமிழகத்துக்கு ரூ. 2.40 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட் டாளர்கள் பங்கேற்றதாகவும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்துள்ள நிறுவனம், தன்னை ஏமாற்றிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் புதிய வழிகாட்டு விதி முறைகளை வகுக்க வேண்டும் எனக்கோரியுள்ளது. எல்லா விதி முறைகளையும் பின்பற்றித்தான் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே தனிப்பட்ட நலன் சார்ந்து இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம் இது போன்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் பெருகும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கடந்த 2015 மற்றும் தற்போது 2019-ல் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு களின் மூலமாக தமிழகம் என்ன பலன் அடைந்துள்ளது என்பதை தமிழக அரசு விரிவாக விளக்க வேண்டும். எத்தனை தொழில்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன?. தொடங்கப்படவுள்ளது? இதன் மூலம் மூலமாக தமிழகத்தில் எத் தனை பேருக்கு வேலை வாய்ப்பு கள் கிடைத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.