

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஜன.22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் திரளானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், போராட்டத்துக்கு ஆசிரியர்களைத் தூண்டியதாக திருவெறும்பூர் வட்டாரக் கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் என்ற பெண் அலுவலரை நேற்று பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். ரெஜி பெஞ்சமின், போராட்டத்தைத் தூண்டும்விதமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பரப்பியதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.