தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்

தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

தலைமைச் செயலக சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1,300 ஆசிரி யர்கள் உட்பட 1,450-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டதையே காரணம் காட்டி பல ஊழியர்கள் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வரு கின்றனர். 28-ம் தேதி காலை வரை 442 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1,450 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத் தம் செய்வதாக அறிவித்தன. நாளைக்குள் அரசு முடிவு எடுக் காவிட்டால், தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்போ வதாகவும் அறிவித்தன.

காரணமானவர்கள்

இந்நிலையில், தலைமைச் செயலக சங்கத்தில், போராட்டத் துக்கு காரணமானவர்கள் என நிதித் துறையில் 4 பேர், சட்டப் பேரவை செயலகம், பள்ளிக்கல்வி, பொதுப்பணி, வேளாண் துறை களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 8 பேரையும் சஸ்பெண்ட் செய்து சம்பந்தப்பட்ட துறைகளின் செய லர்கள் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் நேற்று இரவுக்குள் பணிக்கு திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு பணிக்கு வராத வர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in