பாஜக ஆட்சிக்கு நீங்கள் வைக்கும் முற்றுப்புள்ளியே திமுக ஆட்சியின் துவக்கப்புள்ளி : ஸ்டாலின் பேச்சு

பாஜக ஆட்சிக்கு நீங்கள் வைக்கும் முற்றுப்புள்ளியே   திமுக ஆட்சியின் துவக்கப்புள்ளி : ஸ்டாலின் பேச்சு
Updated on
1 min read

மத்தியில் மோடி தலைமையில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் ஒரு துவக்கப்புள்ளியாக திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கித் தருவதற்கு இந்த நிகழ்ச்சி இருந்திட வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்டசீகம்பட்டி ஊராட்சியிலும், திருவரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியிலும் தி.மு.கழக ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசினார்.

அவரது பேச்சு வருமாறு:

இங்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கின்ற காட்சியைப் பார்க்கின்ற போது அதுவும், ஆண்களைவிட பெண்கள், மகளிர், தாய்மார்கள் அதிக அளவில் வந்திருக்கின்றதை பார்க்கின்ற போது, எதைக் காட்டுகிறது என்று சொன்னால் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைக் காட்டுகின்றது.

இந்தக்கூட்டத்தினுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியும், தலைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று, யாருக்கு என்றால்? தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய அடிமைஆட்சிக்கு, அராஜக ஆட்சிக்கு, அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அதேபோல், மத்தியில் ஆளக்கூடிய ஒரு பாசிச - நாசிச மோடி தலைமையில் நடைபெறக்கூடிய பி.ஜே.பி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் ஒரு துவக்கப்புள்ளியாக திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கித் தருவதற்கு இந்த நிகழ்ச்சி இருந்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகள் எல்லாம் உங்களுக்குத்தெரியும். இவற்றையெல்லாம் இந்த விஞ்ஞான உலகிலே நீங்கள் எளிதில்அறிந்து புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். ஆனால், ஊடகங்களைப் பொறுத்த வரையில் நம்முடைய கட்சி வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதனால்மக்கள் மனதில் எழுச்சி வருவதைப் பார்த்து நமது கட்சி வரக்கூடாது, இதைஎப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் பிரச்சாரங்கள் செய்துவருகிறார்கள்.

ஊடகங்களில் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும், விளக்கத்தை எடுத்துச் சொல்லவேண்டும். அதைவிட்டு விட்டு குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அதுதான் இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கின்றது. தி.மு.கவின் வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதை முறியடிக்கத்தான் இதுபோன்ற கிராம சபைக் கூட்டத்தை நடத்த துவங்கியிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்பு தருவதற்கு நீங்கள் வந்திருக்கக்கூடியக் காட்சியைப் பார்க்கும் போது, தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகம் இருக்கின்றது என்பதை என்னால் உணரமுடிகிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in