Published : 21 Jan 2019 11:02 AM
Last Updated : 21 Jan 2019 11:02 AM

திரைப்படங்கள் நம் வாழ்வை மழுங்கடித்துள்ளன: இயக்குநர் லெனின் பாரதி ஆதங்கம்

புதுச்சேரி அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வளாகத்தில் "மேற்கு தொடர்ச்சி மலை" திரைப்பட இயக்குநர் லெனின் பாரதியுடன் கலந்துரையாடல் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:

திரைப்படங்களை பார்த்து திரைப்படம் எடுப்பது தவறானது.

திரையரங்குகள் கார்ப்பரேட் வசம் செல்வதால் மால்களில் மட்டுமே திரைப்படங்கள் பார்க்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.

திரைக்கலைஞர்கள் அனைத்து விஷயங்களுக்கான நீதிபதிக ளல்ல. அனைத்து விஷயத்திலும் அறிவுரை கூறுவது அவனது பணியல்ல. நாம் மட்டமான மலிவான வாழ்க்கை வாழ திரைப்படங்களே காரணம். நம் வாழ்வை திரைப்படங்கள் மழுங்கடித்துள்ளன. திரைப்படம் ஒரு கலை. தியாகராஜபாகவதர் காலத்திலிருந்தே கதாநாயக வழிபாட்டை பழக்கமாக்கியுள் ளனர். திரைப்படம் பொழுதுபோக் குக்கு மட்டுமல்ல, திரைப்படம் ஓர் ஆவணம் என்று குறிப்பிட்டார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையைச் சேர்ந்த சாலை செல்வம் கூறுகை யில், "சுற்றுச்சூழல், மனிதாபி மானம் என பலவகை விஷயங் களை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை கல்விச்சூழலுக்குள் கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளோம். அதற்கு முன்னோட்டமே இந்நிகழ்வு" என்று குறிப் பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x