துப்புரவு ஊழியர்கள் மேயரை முற்றுகை: ரிப்பன் வளாகம் ஸ்தம்பித்தது

துப்புரவு ஊழியர்கள்  மேயரை முற்றுகை: ரிப்பன் வளாகம் ஸ்தம்பித்தது
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான துப்புரவு ஊழியர்கள் மேயரை ரிப்பன் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

நிரந்தர ஊழியர்கள், கான்ட்ராக்ட் ஊழியர்கள், என்.எம்.ஆர் ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு பிறகு செங்கொடி சங்கத்தை சேர்ந்த தொழிலாளர் பிரதிநிதிகளை சந்திக்க மேயர் ஒப்புக் கொண்டார். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, செங்கொடி சங்கத்தின் செயலாளர் சீனிவாசலு, தலைவர் எல்.சுந்தர்ராஜன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களிடம் கூறியதாவது:

அண்ணா நகர் மண்டலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 42 மலேரியா தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, என்.எம்.ஆர். ஊழியர்கள் எனப்படும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 480 நாட்கள் பணி புரிந்துள்ள துப்புரவு ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்குதல், அண்ணா நகர் மண்டலத்தில் உள்ளது போல அனைத்து மண்டலங்களிலும் துப்புரவு ஊழியர்களுக்கு ஒரு ஷிப்ட் முறையை அமல்படுத்துதல், ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு தொகையையும் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை மேயர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த கோரிக்கைகள் எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்படும் என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவும் மேயர் ஒப்புக் கொண்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in