Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

படுக்கை விரிப்புகளில் திருக்குறள்: சேலம் கோ-ஆப்டெக்ஸில் புது அறிமுகம்

சேலம் கோ-ஆப்டெக்ஸில் திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கம் ஆகியவை அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

சேலம் கோ -ஆப்டெக்ஸில் ஆவணி மாத சுபமுகூர்த்தப் பட்டுப் புடவைகள் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தில் இருந்து, புதிய வடிவமைப்புடன் கூடிய ஜக்கார்டு எம்போஸ் பட்டு புடவைகள் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையில் பல ரகங்களிலும், விதவிதமான வண்ணங்களில் கண்ணைக் கவரும் புடவைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

பேன்சி பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தயாராகும் உயர்தரமான காட்டன் சேலைகள், வேட்டிகள், லுங்கிகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

ஆவணி மாத சுபமுகூர்த்தப் பட்டுப்புடவைகள் மட்டுமின்றி வித்தியாசமான முறையில் சங்க இலக்கியங்களை பறைசாற்றும் விதமான படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது.

திருக்குறள் வாசகம் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள் அழகுற வடிவமைத்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என 5 வகை நிலங்களை தெரிந்துகொள்ளும் விதமான படுக்கை விரிப்புகளும் உள்ளன. இயல், இசை, நாடகம் என தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் படுக்கை விரிப்புகள் உள்ளன. கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் ஜவுளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x