Last Updated : 28 Jan, 2019 10:31 AM

 

Published : 28 Jan 2019 10:31 AM
Last Updated : 28 Jan 2019 10:31 AM

சென்னையில் தயாரித்த அதிநவீன ரயில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே அறிமுகம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கிவைத்தார்

சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் இலங்கையில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டு நேற்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையே இயக்கப் பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

2009-ல் போர் முடிடைவந்த பிறகு இந்திய அரசின் நிதி உதவியுடன் வட மாகாணத்துக்கு ரயில் பாதை, இந்திய ரயில்வேயின் அங்கமான இர்கொன் (IRCON) நிறுவனத்தி னால் அமைக்கப்பட்டு 2014 முதல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும், 2015-ல் கொழும் பில் இருந்து தலைமன்னாருக்கும் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

இரு நாடுகளுக்கும் இடையே நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இலங்கைக்கு 13 பெட்டிகள் கொண்ட அதிநவீன 6 டீசல் இன்ஜின் ரயில்களை தயாரித்துத் தரும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவற்றில் முதல் ரயில் சென்னையில் உள்ள ஐசிஎஃப் நிறுவனத் தால் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் சரக்குக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, உயர் வகுப்புப் பெட்டிகள் 2, இன்ஜின்களுடன் கூடிய 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் 7-ம் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 724 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இலங்கையில் ரயில் தடங்கள் கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் அமைந்துள்ளதால், உப்புக் காற்றால் ஏற்படும் துரு மற்றும் அரிப் பைத் தடுக்கும் வகையில் இந்த ரயிலின் வெளிப் புறமும், முக்கியப் பாகங்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

1,800 எச்பி குதிரைத் திறன் கொண்ட இந்த இன்ஜின் டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது.

இந்த ரயிலில் குளிர்ச்சாதனப் பெட்டியின் இருக்கைகள் சுழலும் வசதியும், தகவலுக்காக எல்சிடி திரைகளும் உண்டு. ஒவ்வொரு இருக்கை யிலும் செல்போனை சார்ஜ் செய்யும் வசதியும், தனித்தனியாக இசையையும் கேட்கவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற் காலியுடன் செல்லும் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயில் இலங்கையில் உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு கொழும்பில் உள்ள கோட்டை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப் பாணத்திலுள்ள காங்கேசன்துறை ரயில் நிலை யம் வரையிலான பயணத்தை நேற்று (ஜன.27) தொடங்கியது.

இதனை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா தொடங்கி வைத்து கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மருதானை ரயில் நிலையம் வரையிலும் பயணித்தார்.

இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ் சித் சிங் சந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x