Published : 01 Jan 2019 10:15 AM
Last Updated : 01 Jan 2019 10:15 AM

ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளை அகற்ற உறுதியேற்போம்: ஆளுநர், முதல்வர், பல்வேறு தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தமிழக மக்கள் அனை வருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு மக்க ளுக்கு சிறந்த எதிர்காலத்தையும், மகிழ்ச்சி, அமைதி, வளம், மகிழ்ச்சி நம்பிக்கையை அளிக்க வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: எல்லோ ரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற ஜெயலலிதா வின் கனவினை நனவாக்கும் வகையில் அதிமுக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவர். மக்கள் நலன் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு அதிமுக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி வளமும், வலிமையும் மிக்க தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதி யேற்போம். இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலர வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தமிழகம் வளம் பெற வும், தமிழர்கள் வாழ்வு வளம் பெறவும் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து தலைமையேற்ற ஜெயலலிதா நாட்டின் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை மாற்றினார். ஆயிரங்காலத்துப் பயிராக விளங்கும் அதிமுகவை இன்னும் எத்தனை நூறாண்டுகள் வந்தாலும் கட்டிக்காக்க புத்தாண் டில் உறுதியேற்போம். தமிழக வளர்சிக்கு உழைப்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: புத்தாண்டு பிறப்பு என்பது, புத்து ணர்வு தோன்றுவது, புதிய பயணம் தொடங்குவது. அது ஆங்கில ஆண்டு மாற்றம் என்பது மட்டுமல்ல; நமது ஆளுமையின் பரிணாம வளர்ச்சி மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வேண்டும். அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல; ஒரு சமூகத்துக்கும், நாட்டுக்கும் அதுதான் இலக்கணம். தொடர்ந்து அத்தகைய வளர்ச்சியை நோக்கிய உதயக் கதிரொளி பாய்ச்சுவதாகப் புதிய ஆண்டு, எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும். அத்தகைய தன்னம்பிக்கையுடன் புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: 2019 புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைத் தரும் ஆண்டாக மலரட்டும். ஜாதி, மத, மூடநம்பிக்கை உள்ளிட்ட சமூகத் தீமைகள் ஒழிந்து, மனிதநேயம், சமூக நீதி, பாலியல் நீதி மேலோங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: இந்திய மக்களுக்கு விடியலைத் தரும் ஆண்டாக 2019 புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன். ஜாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், மத்தியிலும், மாநிலத்தி லும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர புத்தாண்டில் உறுதியேற் போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 2019-ம் ஆண்டை அரசியல் விழிப்பு ணர்வு ஆண்டாக பாமகவுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். தமிழகம் இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் நீங்கி, மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்துக்கும், தமிழக மக்களுக் கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏற்பட புத்தாண்டில் உறுதியேற்போம்.

மதிமக பொதுச்செயலாளர் வைகோ: இருளுக்குப் பின் ஒளி, வாட்டும் பனிக்குப் பின் வளம் தரும் வசந்தம் என்ற நியதியில் நம்பிக்கை கொள்வோம். மலரும் 2019-ம் ஆண்டு தமிழக அரசிய லிலும், இந்திய அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகிறது. வரும் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல உறுதியேற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஏழை மக்களின் துன்பங்கள் நீங்கி, அவர்கள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட புத்தாண்டில் வாழ்த்துகிறேன். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து சமதர்ம சமுதாயம் மலர புத்தாண்டில் உறுதியேற்போம்.

மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்: பிரதமர் மோடியின் ஆளுமைத் திறனால் அனைத்து துறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக நாடுகள் மத்தியில் நாட்டின் கவுரவம் உயர்ந்துள்ளது. 2019 தேர்தலில் ஒவ்வொருவரும் நல்ல முடிவெடுத்து பிரதமர் மோடிக்கு துணை நிற்க வேண்டும். அனைவருக்கும் நன்மைகள் தரும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: ஊழலற்ற ஆட்சி நடத்தும், வளர்ச்சி நாயகன் பிரதமர் மோடியின் நல்லாட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் சபதமேற்போம். மக்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வேண்டுமெனில் மோடி மீண்டும் அரியணை ஏற வேண்டும். அதற்கு ரத்தத்தை வியர்வையாக்கி பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்: மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும் வீழ்த்தும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். மக்க ளைக் கூறுபோடும் ஜாதி, மத பேதங்களையும், ஆணவப் படுகொலைகள், சமூக ஒடுக்கு முறைகளை எதிர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்து கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கடந்த நான்கரை ஆண்டுகளாக நாடு இந்துத்துவ சக்திகளிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இருள் சூழ்ந்த வானில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக, இடது சாரி சக்திகள் ஒன்றுதிரண்டு 2019 தேர்தலில் மதவாத சக்தி களை வீழ்த்த புத்தாண்டில் உறுதி யேற்போம்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட் டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கடந்த ஆண்டின் கசப்புகள் மறைந்து மகிழ்ச்சி பெருக வாழ்த்து கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற் றக் கழக துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன்: கனவு கள் அனைத்தும் நனவாகி எட்டுத்திக்கும் மகிழ்ச்சி பொங் கும் ஆண்டாக புத்தாண்டு அமை யட்டும். தமிழகத்தில் ஜெயலலிதா ஏற்படுத்திய சாதனைகள் அனைத் தும் கடந்த 2 ஆண்டுகளில் நீர்த்துப் போயுள்ளன. இந்நிலையை மாற்றி மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை ஏற்படுத்த நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விடும் மத்திய பாஜக அரசை வீழ்த்தும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன். விடாமுயற்சியுடன் புதிய மாற்றத்தை நோக்கி புத்தாண்டில் பயணிப்போம்.

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்: பழை யன கழிதலும், புதியன புகுத லும் சமுதாயம், அரசியல் என அனைத்து தளங்களிலும் அன்றா டம் நிகழ்ந்து வருகிறது. இந்த 2019 புத்தாண்டில் புதிய பாரதம் உருவாக மாணவர்கள், இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண் டும். தேசிய அளவில் அரசியல் உறுதித்தன்மை அமைய புத்தாண்டில் உறுதியேற்போம்.

கவிஞர் வைரமுத்து: ஆண்டில் ஏது பழையதும் புதியதும்? நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும். புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம். வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்ஜிகே. நிஜாமுதீன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் ஏ. நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் உள்ளிட் டோர் புத்தாண்டு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x