

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம் ஈசநத்தத்தில் நேற்று நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பேசியதாவது:
நான் உள்ளாட்சித் துறை அமைச் சராக இருந்தபோது ஊராட்சிக ளுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு வருவதற்காக ஊராட் சிக்கு ரூ.20 லட்சம் நிதி, பல்வேறு துறைகள் மூலம் ரூ.1 கோடி நிதி, அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் ஆகிய வற்றை திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கித் தந்துள்ளோம்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக் கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் இருந்து தப்பிக் கவே தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தி உள்ளார் என்றார்.
அதன்பின், பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச் சினைகளுக்கு பதிலளித்து பேசிய அவர், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிடும் என்று கருதியே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரு ஆட்சி களையும் அப்புறப்படுத்த தயாரா குங்கள். நம்பி இறங்குங்கள், நான் இருக்கிறேன்’’ என்றார்.