Published : 22 Jan 2019 08:57 AM
Last Updated : 22 Jan 2019 08:57 AM

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் உரு வாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சில தினங்களில் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடலின் நில நடுக்கோட்டு பகுதி மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவியது.

இது காற் றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்று, இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது மேலும் வலுப்பெற்று தமிழகம் நோக்கி வர வாய்ப்புகள் குறைவு. சில தினங்களில் இந்திய பெருங்கடல் பகுதியிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த அளவாக உதகையில் 4.2 டிகிரி, வால்பாறையில் 6 டிகிரி, கொடைக்கானலில் 10.3 டிகிரி, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனி நிலவக்கூடும். தமிழகம், புதுச் சேரியில் 2 நாட்களுக்கு மூடுபனி நிலவவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x