விழுப்புரம்: காதலிக்க மறுத்த மாணவியை பீர்பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலை

விழுப்புரம்: காதலிக்க மறுத்த மாணவியை பீர்பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலை
Updated on
1 min read

விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைகல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருக்கிறார்.

இந்நிலையில் மாணவியை திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பல முறை மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவி மறுத்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். திருவெண்ணெய்நல்லூர் கள்ளு கடை பேருந்து நிலையம் அருகில் வந்த போது மாணவியை வழிமறித்த மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கி வயிற்றில் குத்தினார்.

இதில் நிலைகுலைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய மணிகண்டனை போலீஸார் தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in