

கட்அவுட் வைத்து பால் ஊற்றுமாறு சொல்லிய நடிகர் சிம்பு மீது காவல் ஆணை யர் அலுவலகத்தில் பால் முகவர்கள் சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
நடிகர் சிம்புவின் புதிய படம் வருகிற 1-ம் தேதி வெளியாகிறது.
“எனது திரைப்படம் வெளியாகும்போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள். கட் அவுட்களுக்கு குடத்தில் பால் ஊற்றுங்கள்” என நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழி லாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர் பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நேற்று புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், “கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள் என ரசிகர்களை உசுப்பேற்றி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் பேசி காணொலி வெளியிட்ட நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். சிம்புவின் திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.