Published : 17 Jan 2019 08:25 AM
Last Updated : 17 Jan 2019 08:25 AM

கருணாநிதி இல்லாத பொங்கல் விழா; ரூ.10 அன்பு பரிசு பெற முடியவில்லையே- ஏக்கத்தில் திமுக நிர்வாகிகள்

கருணாநிதியிடம் ரூ.10 அன்புப் பரிசு பெற முடியாமல் போனதால் இந்த ஆண்டு பொங்கல் விழா உற் சாகமாக இல்லை என திமுகவினர் கவலையுடன் தெரிவித்தனர்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ஆண்டுதோறும் பொங்கல் விழாவை தனது கோபால புரம் வீட்டில் கொண்டாடுவார். அவருக்கு வாழ்த்து கூறி ஆசி பெறுவதற்காக குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கோபால புரம் வீட்டுக்கு வருவார்கள். அவர் களுக்கு கருணாநிதி வாழ்த்து தெரி வித்து தனது கையால் 10 ரூபாய் புதிய நோட்டை அன்புப் பரிசாக வழங்குவார். அவரிடமிருந்து அந்தப் பரிசை பெறுவதற்காக தமி ழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதிகாலை முதலே கோபாலபுரம் வீட்டின் முன் காத்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கருணாநிதி இல்லை. இதனால், கோபாலபுரமும் களை இழந்து காணப்பட்டது. அதே நேரத்தில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தலைவரை பார்த்து வாழ்த்து பெறுவதே எங்களது முதல் பணியாகும். தன்னை சந்திக்க வருபவர்களுக்கு அன்புப் பரிசாக ரூ.5 அளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ரூ.10 கொடுத்து வந்தார். வாழ்த்து கூற வருவோர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தனது குடும்பத்தினரே வந்தாலும் 10 ரூபாய் நோட்டைத்தான் அளிப்பார். மு.க.ஸ்டாலினுக்கும் 10 ரூபாய் தான் அளிப்பார். 30 ஆண்டு களாக அவரிடம் அன்புப் பரிசை பெற்று வந்தோம். அவர் கொடுக்கும் தொகை எவ்வளவு என்பது முக்கியமில்லை. அவரது கையால் ரூ.10 பரிசு பெறுவது பெரிய மகிழ்ச்சியை அளிக்கும். இந்த ஆண்டு அவர் இல்லாத தால், உற்சாகமில்லாத பொங்கலா கத்தான் பார்க்கிறோம். மாவட்ட கட்சி அலுவலகங்களில் பெரும்பா லான இடங்களில் பொங்கல் விழா இல்லை, விளையாட்டு போட்டி களும் நடத்தவில்லை’’ என்றனர்.

திமுக தொண்டர்கள் சிலர் கூறும் போது, ‘‘கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது வழியில் மு.க.ஸ்டா லின் செயல்பட்டு வருகிறார். பொங் கல் திருநாளில் கருணாநிதியைப் போல அன்புப் பரிசு வழங்கும் வழக்கத்தை ஸ்டாலினும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. திமுக மாநில நிர்வாகிகள், முன் னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x