Published : 17 Jan 2019 09:50 AM
Last Updated : 17 Jan 2019 09:50 AM

காணும் பொங்கலையொட்டி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்; மெரினா கடற்கரை, சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு: கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற் கரை உள்ளிட்ட சுற்றுலா தலங் களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் காவல்துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங் கல் என்று மூன்று நாட்கள் சிறப் பாகக் கொண்டாடப்படும். அதன் படி, இந்தாண்டு பொங்கல் விழா வும் மாட்டுப் பொங்கலும் வழக்க மான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. மதுரை உள்ளிட்ட இடங் களில் ஜல்லிக்கட்டு உற்சாகம் கரை புரள அமர்க்களமாக நடைபெற்றது.

இந்நிலையில், காணும் பொங் கல் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்களது பெற்றோர், உறவி னர்கள், நண்பர்களுடன் சுற்றுலா தலங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்வர். காலையில் உணவுப் பொட்டலம் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்படும் மக்கள் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங் களுக்குச் சென்று காணும் பொங் கலை ஆனந்தமாகக் கொண்டாடு வார்கள். காணும் பொங்கலை யொட்டி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக மெரினா கடற்கரையில் பாதுகாப்பு கருதி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மக்கள் செல்லாமல் இருப்பதற்காக சவுக்கு கட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கிருந்து கடற் கரையில் கூடும் மக்களை உன் னிப்பாக கண்காணித்து பாதுகாப்பு அளிக்க காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அத்துடன் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய விவரங்களை ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுத்து உரியவர்களிடம் ஒப் படைத்தல் உள்ளிட்ட பணி களுக்காக இரண்டு கட்டுப் பாட்டு அறைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. வழக்கமாக மெரினா கடற்கரையில் காவல் துறையினர் குதிரைகளில் அமர்ந்து ரோந்துப் பணியை மேற்கொள் வார்கள். காணும் பொங்கலை முன்னிட்டு இந்த ரோந்துப் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

மெரினா கடற்கரை போல பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, வண்டலூர் மிருகக் காட்சி சாலை, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, கிண்டி தேசிய சிறுவர் பூங்கா, எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா நினைவிடம் உள்ளிட்ட இடங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பிற பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்கா சாலையில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு வரும் மக்களிடம் எந்தெந்த உணவுப் பொருட்களில் கலப்படம் இருக் கும் என்றும், அதை எவ்வாறு கண்டறிவது என்றும் எடுத்துக் கூற வுள்ளனர். அதற்காக சுமார் 15 உணவுப் பொருட்களை காட்சிக்கு வைத்து அதில் வண்ணம் அதிக மாக இருக்கும் பொருளில் கலப் படம் இருக்கும் அதை வாங்கக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

அத்துடன் உணவு உண்ப தற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். குளிர்காலத்தில் எந்தமாதிரியான உணவு வகை களை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தவுள்ளனர். இதுபோன்ற ஸ்டால் மாமல்லபுரத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் கூடுதலாக 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, காணும் பொங்கல் நாளான இன்று பொதுமக்களின் வசதிக்காக, அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு (படகு குழாம்), கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x