எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு 

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு 
Updated on
1 min read

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவம னையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்கு நர் எட்வின் ஜோ, மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் உள்ளிட்டோர் உடன் இருந்த னர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏழை மக்களுக்கு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயுஷ் மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். அறுவைச் சிகிச்சைகள் மட்டுமின்றி முன்கூட்டிய பரிசோதனைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பிறகான கண்காணிப்பு என அனைத்தும் காப்பீட்டில் அடங் கும்.

மருத்துவக் காப்பீடு

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத் தில் முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்தில் செயல்படுத்தப் படுகிறது.

அந்த திட்டத்துடன் சேர்த்து மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ஏழைகள் அனைவரும் பயன்பெற முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in