

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், டிஜிபி ராமானுஜம், சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை நேற்று மாலை ராஜ்பவனுக்கு வரவழைத்த ஆளுநர் ரோசய்யா, தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். வன்முறைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.