Published : 27 Jan 2019 08:12 AM
Last Updated : 27 Jan 2019 08:12 AM

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குடியரசு தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட் டது.

 

சென்னை உயர் நீதிமன்றத் தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி தேசியக் கொடியேற்றி வைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சேப்பாக்கம் எழிலகத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத் தில் அதன் மேலாண் இயக்குநர் எஸ்.சண்முகம் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த விழாவில் மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றினார். மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 94 அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மகளிர் குழுக்களுக்கு ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் வங்கிக் கடன் இணைப்புக்கான காசோலை யையும் வழங்கினார்.

 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தேசிய கொடியேற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

சென்னை குடிநீர் வாரியத்தில் அதன் மேலாண் இயக்குநர் அசோக் டோங்ரே, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் அதன் மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றினர். இதைத் தொடர்ந்து அந்தந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

 

தெற்கு ரயில்வே சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற விழா வில், பொதுமேலாளர் ஆர்.கே. குல்ஷிரேஸ்தா, ரயில்வே இணைப்புப் பெட்டித் தொழிற் சாலையில் நடந்த விழாவில் அதன் முதன்மை தலைமை மின்னியல் பொறியாளர் என்.கே.குப்தா, அயனாவரத்தில் நடந்த விழாவில் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் நவீன் குலாடி, இந்தியன் வங்கி சார்பில் ராயப்பேட்டையில் நடந்த விழாவில் வங்கியின் மேலாண் இயக்குநர் பத்மஜா சுந்துரு, மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் நடந்த விழாவில் அதன் இயக்குநர் ஜி.அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றினர்.

 

சென்னை துறைமுக வளாகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் ப.ரவீந்திரன், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடந்த விழாவில் அதன் பொதுமேலாளர் சஞ்சய் குமார், வருமானவரித் துறை அலுவலகத்தில் நடை பெற்ற விழாவில், தமிழ்நாடு, புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் பி.முரளி குமார், எல்ஐசி தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் மேலாளர் ஆர்.தாமோதரன், ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடந்த விழாவில் அதன் செயல் இயக்குநர் டி.ராஜேந்திரன் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.

 

தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஷிர்டி சாய் சேவா சமாஜ் செயலர் எஸ்.சீனிவாசன் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அரசியல் கட்சி அலுவலகங்களில்..

 

70-வது குடியரசு தின விழா அரசியல் கட்சி அலுவலகங்களில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடியேற்றினார்.

 

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், சேவா தளத்தலைவர் விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசியக் கொடியேற்றி வைத்து பேசினார். தமாகா சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தேனாம்பேட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

 

சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கிருந்து வீடியோ மூலம் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x