

பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய போலீஸாரை கைது செய்ய வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை போலீஸாரில் சிலர் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் புதுவையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைப்பின் புதுவை மாநில கிளை சார்பில் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கவுன்சில் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். சர்வதேச மனித உரிமைகள் தேசிய தலைவர் தணிகைவேல், செயலர் மங்கல லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.