

மின் வாரிய அதிகாரிகள், சென்னையில் நடத்திய திடீர் சோதனையில், ரூ. 5.35 லட்சம் மதிப்பிலான மின் திருட்டை கண்டுபிடித்தனர்.
தமிழக மின் வாரிய பறக்கும் படையின் சென்னை பிரிவினர் மற்றும் மின் பகிர்மான தெற்கு வட்ட அதிகாரிகள் இணைந்து, கடந்த 16-ம் தேதி சென்னையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நிறுவனத்தில் ரூ.5.35 லட்சத்துக்கு மின் திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான இழப்பீடு அந்த நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட்டது.
மேலும், சம்மந்தப்பட்ட நுகர்வோர் தங்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க அதற்குரிய சமரசத்தொகையாக ரூ.1.10 லட்சம் செலுத்தியதால், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்படவில்லை.
தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது