Published : 04 Dec 2018 09:14 AM
Last Updated : 04 Dec 2018 09:14 AM

ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல் சம்பவம்: திண்டுக்கல் அதிமுக எம்பி மன்னிப்பு கோரினார் - மதுரையில் அதிகாரிகள் முன்னிலையில் சமரசம்

திண்டுக்கல் அருகே ரயில்வே கேட் கீப்பரைத் தாக்கியது தொடர்பாக நேற்று நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையின்போது, அதிமுக எம்பி மன்னிப்புக் கோரியதாக அதிகாரி களும், பாதிக்கப்பட்ட கேட் கீப்ப ரும் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் உதயகுமார். இவர் நேற்று முன்தினம் மாலை அழகம்பட்டி வழியாக ஜல்லிபட் டிக்கு காரில் தனது ஆதரவாளர் களுடன் சென்றார். அப்போது, அழகம்பட்டி ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. கேட்டை உடனே திறக்கும்படி கேட் கீப்பர் மணி மாறனிடம் எம்பி கூறினாராம். ஆனால், ரயில் கொடைரோட்டை தாண்டி வேகமாக வந்து கொண்டி ருப்பதால் கேட்டை திறக்க முடி யாது என மணிமாறன் உறுதியாக மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து, உதயகுமார் எம்பிக்கும், மணிமாறனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதனால் ஆத்திரமடைந்த எம்பி, மணிமாறனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இது பற்றிய தகவல் மதுரை கோட்டத் தில் உள்ள கேட் கீப்பர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினருக்கு தெரியவந் தது. இதையடுத்து, அனைத்து கேட் கீப்பர்களும் பணியை புறக்கணித் தனர்.

ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்

இதனால், ரயில் நிலையங்க ளுக்கு கேட் கீப்பர்களிடம் இருந்து சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற் பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு மதுரை, திண்டுக் கல் வழியாகச் சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 1 மணி நேரம் தாமதமாகச் சென்றதால் பயணிகள் காரணம் புரியாமல் தவித்தனர்.

பரஸ்பரம் புகார்

இதற்கிடையே, தம்மை கேட் கீப்பர் தாக்கியதாக அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் எம்பி உதயகுமாரும், அதேகாவல் நிலையத்தில் எம்பிக்கு எதிராக மணிமாறனும் பரஸ்பரம் புகார் தெரிவித்தனர்.

எம்பி தாக்கியதில் காயம டைந்த கேட் கீப்பர், மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக எம்பி மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி, ரயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத் தம் செய்யத் திட்டமிட்டனர்.

இந்நிலையில், உதயகுமார் நேற்று மதியம் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு வந்தார். கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா, ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் முன்னிலை யில் அழகம்பட்டி ரயில்வே கேட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது.

பாதிக்கப்பட்ட கேட் கீப்பர் மணிமாறனும் இதில் பங்கேற் றார். சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. கேட் கீப்பரை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்து எம்பி மன்னிப்பு கேட்டதாக அதிகாரிகள் கூறினர்.

எம்பியின் மாறுபட்ட விளக்கம்

இதுபற்றி உதயகுமார் எம்பி கூறியது: கொடைரோட்டில் 2 ரயில்களை நிறுத்துவது தொடர்பாக கோட்ட மேலாளரை பார்க்க வந் தேன். இதற்கிடையில், அழகம்பட்டி ரயில்வே கேட்டில் நடந்த சம்பவம் பற்றியும் பேசினோம். அந்த கேட் கீப்பர் மணிமாறன் மொபைல் போனில் பேசிக்கொண்டே பணியில் ஈடுபட்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அவர் மீது புகார் செய்தேன். சமரச பேச்சில் இனிமேல் அது போன்று நடக்காது என அவர் கூறியதால் இருதரப்பிலும் கொடுத்த புகார் களை திரும்ப பெறுகிறோம் என்றார்.

இதுகுறித்து மணிமாறன் கூறும் போது, "அழகம்பட்டி ரயில்வே கேட்டில் நடந்த சம்பவத்துக்கு எம்பி வருத்தம் தெரிவித்தார்" என்றார்.

கட்சி மேலிடம் நெருக்கடி?

இதுபற்றி ரயில்வே தொழிற் சங்கத்தினர் கூறும்போது, "ரயில்வே தொழிலாளர்கள் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் தேவையின்றி தகராறு செய்ய மாட்டார்கள். தற் போதைய சூழலில் அதிமுக மேலிடம் எம்பி மீது அதிருப்தி அடைந்திருக்கலாம். இப்பிரச்சினை யில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் போராட்டம் தொடங்கினால் அது அதிமுகவுக்கு தலைவலியை ஏற் படுத்தும். இதனால்தான் உதய குமார் எம்பி சமரசம் பேச வந்ததாக கருதுகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x