Published : 05 Jan 2019 08:51 AM
Last Updated : 05 Jan 2019 08:51 AM

சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் வருமானவரித் துறையினர் 2-வது நாளாக சோதனை

சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல் களில் வருமானவரித் துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் கிளைகளைக் கொண்ட சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் ஹோட் டல்களில் நேற்று முன்தினம் காலை யில் திடீரென வருமானவரி புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர்.

இதேபோல சரவணபவன் ஹோட் டலின் கார்ப்பரேட் அலுவலகம், உரிமையாளர் ராஜகோபாலின் வீடு, தியாகராயநகர் கிராமி சாலையில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டலின் கார்ப்பரேட் அலுவலகத்திலும், அடை யாறு காந்தி நகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் ஹோட்டலின் கார்ப்பரேட் அலுவலகத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 4 நிறுவனங்களுக்கும் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரண்டாவது நாளாக சோதனை நீடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. அது முடிவடைந்த பிறகே சோதனையின் முழு விபரத்தையும் வெளியிட இயலும்’’ என்றனர்.

இந்நிலையில் கணக்கில் காட்டாத பணத்தில் சொத்துகள் வாங்கப்பட்டுள் ளதா? பணப்பரிமாற்றம் ஏதும் நடை பெற்றுள்ளதா? என்று பறிமுதல் செய் யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப் படையில் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x