சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் இருவரும் மாவோயிஸ்ட்டுகள் !- எச்.ராஜா ட்வீட்

சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் இருவரும் மாவோயிஸ்ட்டுகள் !- எச்.ராஜா ட்வீட்
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் இருவரும் மாவோயிஸ்ட்டுகள். சபரிமலைக்குள் பெண்களை அனுமதித்தற்காக பினராயி விஜயன் தக்க முறையில் தண்டிக்கப்படுவார் என்று  ட்வீட் செய்திருக்கிறார் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா.

முன்னதாக, நேற்று பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து கேரளாவில் வலதுசாரி அமைப்புகள் கடும் போராட்டத்தில் குதித்துள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "திருட்டுத்தனமாக 2 மாவோயிஸ்ட் ஒளித்து வைத்து காலை 3.45 க்கு காவல்துறையிலுள்ள தன் கையாட்கள் மூலமாக சபரிமலையின் புனிதத்தை கெடுத்திட சதி செய்துள்ள பினராயி விஜயன் தக்க முறையில் தண்டிக்கப்படுவார்.   இவர் ஒரு இந்து விரோத சதிகாரர். முதல்வராக இருக்கத் தகுதியற்றவர்" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in