

மலேசியா நாட்டில் இருந்து 4-வது கப்பலில் சுமார் 49 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்து சேர்ந்தது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு இதுவரை 3 கப்பல்களில் மலேசிய ஆற்று மணல் வந்து விற்பனையா கிவிட்டது. இப்போது 4-வது கப்பலில் 49,690 மெட்ரிக் டன் மணல் வந்து சேர்ந்துள்ளது. மலேசியாவில் புயல் காரணமாக மணல்வரத்து சற்று குறைந் திருக்கிறது. தற்போது மணல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விற்கப் பட்டது. இப்போது ஒரு யூனிட் விலை ரூ.10,013 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5-வது கப்பல் அடுத்த இரண்டு வாரத்தில் வந்துசேரும். 60 கப்பல்கள் மூலம் தலா 50 ஆயிரம் மெட்ரிக் டன் வீதம் மொத்தம் 30 லட்சம் மெட்ரிக் டன் மலேசிய நாட்டு ஆற்று மணல் கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மணலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. நாளை முதல் (புதன்கிழமை) விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.