Last Updated : 17 Jan, 2019 08:38 AM

 

Published : 17 Jan 2019 08:38 AM
Last Updated : 17 Jan 2019 08:38 AM

உயர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளால் அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு

உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட் டால் அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு அமைதியாக நடந்து முடிந்தது. காளைகள் முட்டியதில் 42 பேர் காயமடைந்தனர்.

அவனியாபுரத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தது. ஜல்லிக்கட்டுக் குழு வில் பிரதிநிதித்துவம் கேட்ட அனைவரையும் சேர்த்து ஆலோசனைக் குழுவும் அமைக்கப் பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு நேற்று நடத்தியது. ஆட்சியர் எஸ். நட ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பதிவு செய்த 641 காளைகளில் 533 காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு திடலுக்கு அழைத்து வரப்பட்டன. அதில் 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மாலை 4.15 வரை 476 காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங் கேற்றனர். இவர்களில் 45 பேர் பல் வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு 8 சுற்றுகளாக நடத்தப்பட்டது. முத்துப்பட்டி திரு நாவுக்கரசு 9 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். முடக்கத்தான் அறிவமுதன் 7 காளைகளை அடக்கி 2-ம் இடமும், சோலை அழகுபுரம் ஆறுமுகப்பாண்டி, அஜித்குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 3-ம் இடமும் பிடித்தனர்.

மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் தப்பிய காளை களில் கீழ்மலையனூர் அங்காள பரமேஸ்வரி காளை முதலிடமும், காஞ்சிரங்குளம் கோயில் காளை 2-ம் இடமும், ராஜக்கூர் எம்பி ஆம்புலன்ஸ் காளை 3-ம் இடமும் பிடித்தன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர், பார்வையாளர்கள் என 42 பேர் காயமடைந்தனர். இவர்களில் 9 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். உயர் நீதிமன்ற உத்தரவால் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தி யில் அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடைபெற்றது தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் அமைக்கப் பட்ட ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப் புக் குழு தலைவர் ராகவன், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் வரும் ஜன.22-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x