Published : 24 Jan 2019 09:09 AM
Last Updated : 24 Jan 2019 09:09 AM

2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்: ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்தன - பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000 தொழிலதிபர்கள் பங்கேற்பு

தமிழக அரசின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான முதலீட் டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு மூலம் ரூ.2 லட்சம் கோடி என்ற இலக்கையும் தாண்டி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 2015-ல் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. இதன்மூலம், 98 நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டு, ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2-வது முதலீட்டாளர்கள் மாநாட் டுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பல இடங்களுக்கும் சென்று தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்நிலையில், 2-வது உலக முதலீட்டா ளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, முதல்வர் பெற்றுக்கொண்டார். மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் பேசியதாவது:

தமிழக தொழில் வரலாற்றில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதுடன், இது முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி, பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங் கள் தொடங்கப்படுவதற்கான முன்னேற்ற நிலையில் உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிமுகப் படுத்திய ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’ மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழக பொருளாதாரம் மற்ற மாநிலங்களைவிட வலுவான, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன்மூலம் பொருளாதார முன்னேற்றத்தில் நாட்டிலேயே 2-வது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 சதவீதமாக உள்ளது.

கடந்த 1992-ல் ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக ஆட்டோமொபைல் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. ஃபோர்டு, ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் இங்கு ஆலையை நிறுவின. இதனால், உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஆலைகள் நிறைந்த இடமாக சென்னை மாறியுள்ளது. கடந்த 2003-ல் கொண்டுவரப்பட்ட தொழில் கொள்கைக்கு பிறகு, தமிழகத்தில் மின்னியல், மின்னணுவியல் சார்ந்த தொழிற்சாலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டன.

தமிழகம் தொழில் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. மின்மிகை மாநிலமாக திகழ் கிறது. மாநிலத்தின் அனைத்து துறைமுகங் களையும் இணைக்கும் வகையில் நெடுஞ் சாலைத் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, பெண்கள், குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், எஸ்சி, எஸ்டி நலன், சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

30 நாட்களுக்குள் அனைத்து அனுமதி களும் கிடைக்கும் வகையில், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. மாநகரங் களில், சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் ‘மின்சார வாகன கொள்கை’ விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கை அடிப்படையில், இதுவரை 35 நிறுவனங்கள், தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஓ) ஒப்பந்தம் செய்துள்ளன. வானூர்தி மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்காக ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கரில் அமைக்கப் பட்ட வானூர்தி மற்றும் பாதுகாப்பு பூங்கா 700 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை, மொத்தம் 27 ஆயிரத்து 953 மில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளது. இதில் 75 சதவீதம், கடந்த 7 ஆண்டுகளில் பெறப்பட்டவை.

இந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சம் கோடிக்கு முதலீடு களை ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், ஏற்கெனவே முதலீடுகள் இலக்கை தாண்டிவிட்டன. இந்த மாநாட்டின்மூலம் எவ் வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்பது மாநாட்டு நிறைவு விழாவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். சென்னை சோழிங்கநல்லூரில் ஃபோர்டு சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த் தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மாநாடு தொடங்கியதும், பல்வேறு துறைகளின் கீழ் கருத்தரங்குகள் நடந்தன. இதற்கிடையில், பல்வேறு நாடுகளின் கருத்தரங்குகள், முதலீட் டாளர்களிடையே பேச்சுவார்த்தை, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகி யவை நடந்தன.

மாநாடு இன்று நிறைவு

2-ம் நாளான இன்று, சிறு குறு தொழில் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், தொழில் கட்டமைப்பு, சுகாதாரம், பாரம்பரியம் மற்றும் சூழல் சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, மின்னணுவியல் துறை தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் துறை, ஜவுளி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளின் கருத்தரங்குகள் நடக்கின்றன. இதுதவிர, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.

மாலை 3 மணி அளவில், தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கின் றன. இதைத் தொடர்ந்து, மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள் ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட் டின் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் முத லீடுகள், ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களை மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x