Published : 09 Jan 2019 09:53 AM
Last Updated : 09 Jan 2019 09:53 AM

பிளாஸ்டிக் தடையை கண்டித்து ஊர்வலம்; பேரவையை முற்றுகையிட சென்ற வணிகர்கள் கைது: அவகாசம் அளித்து தடையை அமல்படுத்த வலியுறுத்தல்

பிளாஸ்டிக் தடையை கண்டித்து சட்டப்பேரவையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்திருந்தது. இதற்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணி கர்கள் நேற்று காலை ஒன்று திரண்டனர். இந்த போராட்டத் துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங் கினார். கலைவாணர் அரங்கத்தில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி வணிகர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போலீஸார் தடுப்புகள் அமைத்து, ஊர்வலமாக வந்த வணிகர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் புதுப் பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டத்தின்போது, ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் தடையை நிறை வேற்ற சாதாரண பெட்டிக் கடை களில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பது, கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைளை எடுத்து வியாபாரிகளை அரசு அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர். கடை களில் ஆய்வு நடத்தும் அதிகாரி களுக்கேகூட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் எது என்று தெரியவில்லை. இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு பிறகும் பிளாஸ்டிக் தடையை நிறுத்தி வைக்காவிட்டால் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வியாபாரிகளை பேச்சுவார்த் தைக்கு அழைத்து பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருளை உறுதிப் படுத்திய பிறகு கால அவகாசம் அளித்து பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும். அது வரை பிளாஸ்டிக் தடையை நிறுத்தி வைக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்டவற் றின் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படவில்லை. இதன் மூலம், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆட்சியாளர்கள் கைகோத்துள்ளனர் என்பது தெரியவருகிறது. சிறு வியாபாரி களை அழிக்கும் வகையில் பிளாஸ் டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x