

பெண்கள், மூத்த குடிமக்களுக்கான புதிய சேமிப்பு திட்டங்களை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பரோடா வங்கி பெண்கள், மூத்த குடிமக்களுக்கு பயன் ஏற்படும் வகையில் 2 சேமிப்புக் கணக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி.எஸ்.ஜெயக்குமார், செயல் இயக்குநர் சாந்தி லால் ஜெயின் ஆகியோர் இத்திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
மேலும், ‘பரோடா சம்ரித்தி டெபாசிட் திட்டம்' என்ற பெயரில் 444 நாட்கள் கால அளவுகொண்ட, 7.15 சதவீதம் வட்டி கிடைக்கக் கூடிய வைப்புத் தொகை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டி கிடைக்கும்.
இத்திட்டங்களின் அறிமுக நிகழ்ச்சியில், வங்கியின் பொது மேலாளர் ஜவஹர் கர்னாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.