Published : 14 Jan 2019 08:28 PM
Last Updated : 14 Jan 2019 08:28 PM

குழந்தைகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வூட்டும் ரோபோ கண்காட்சி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை புதிதாக ஏற்படுத்தியுள்ள குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடம் (Children’s Road Safety Gallery) மற்றும் அதில் இடம்பெற்றுள்ள ரோபோ கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் ஏழாம் தளத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு காட்சிக்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று தொடங்கி வைத்தார்.

சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலைகளில் இடம் பெற்றுள்ள கோடுகள்,  போக்குவரத்து சமிக்ஞைகள் (Traffic Signs) பற்றிய விளக்கங்கள், சாலைகளில் இடம் பெற்றுள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள் (Road safety traffic equipment), அதன் பயன்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஆகியவை இந்தக் காட்சிக்கூடத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சிக்கூடம் Media Max, The Federation of Motor Sports Clubs of India, S.P. Robotic Works ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிக்கூடத்தின் சிறப்பு அம்சமாக, ரோடியோ எனும் ரோபோட் இடம் பெற்றுள்ளது. குழந்தைகளைக் கவரும் விதமாகவும் அவர்களுக்கு எளிதில் புரியக் கூடிய வகையிலும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சாலை பாதுகாப்பு விதிமுறைகள், இந்த ரோபோட் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறும்.

மேலும் இந்த ரோபோட் S.P. Robotic Works நிறுவனத்தில் பயிலும் பள்ளி குழந்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது  இதன் கூடுதல் அம்சம் ஆகும். இன்றைய குழந்தைகள் நாளைய வாகன ஓட்டிகள் என்பதால், சாலை பாதுகாப்பு குறித்த அடிப்படை எண்ணங்களை குழந்தைப் பருவம் முதலே அவர்களிடம் உருவாக்கவும், விபத்தில்லா எதிர்காலத்தை உருவாக்கவும், இந்த குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடம் சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x